சனி, 14 ஜூலை, 2018

யார் தந்த சாபம்!

யார் தந்த சாபம்!

 

பஞ்சமில்லா வளங்களே!

இன்று நீங்கள் அழிவது

யார் தந்த சாபமோ?

பச்சைநிற வயல்கலெல்லாம்

வறண்டு கிடப்பது

நிலத்திற்கு வந்த சாபமா?

இல்லை பசுமையின்

மேல் வந்த கோபமா?

குளமும் ஆறும் காய்ந்து

திடலாய் மாறுவது

இனிவரும் தலைமுறைக்கு

வந்த கேடா?

இல்லை சிலதலைமுறை

பாதுகாக்க மறந்ததன்

அபாய கோடா?

காற்றாட உண்டகாலம் போய்

இன்று காற்றை

சுவாசிக்க முடியாத காலம்

வந்துவிட்டதே....

காய்த்துகுலுங்கும் மரங்கள் எல்லாம்

வெட்டி சாய்த்து கிடப்பதால்

மழை இல்லாமல் தவிக்கும்

வானம் பார்த்த பூமி

இன்று செத்து மடியுதே

விவசாயம் என்னும் சாமி...

மண் திருட்டால்

மண்வளம் சுறண்டப்பட்டு

பேரழிவு எழுகிறதே...

இது யார் தந்த சாபமோ?

விளைநிலங்களை அழித்து

தொழிற்சாலை அமைக்கும்

அறியாமை அழிய

இனியாவது எழுவோம்...

இயற்கை தந்த பல

வளங்களை காப்போம்

அதற்கிட்ட சாபத்தை அழிப்போம்....