கானல்நீர்

                                           கானல்நீர்

கானூர் என்னும் ஊரியில் அகிலன் என்பவன் தன்னுடைய
தந்தையுடன் வாழ்ந்து வந்தான்.அவன் தந்தை விவசாயம்
செய்து அவனை படிக்க வைத்து வந்தார்.அகிலனின் தாய்
அவனுடைய சிறுவயதிலேயே இறந்துவிட்டார்.வகுப்பில்
 சுட்டியாக விளங்கிய இவனை மிகவும் செல்லமாக தந்தை  வளர்த்து வந்தார்.இவன் தன்னுடைய ஒன்பதாவது வகுப்பு காலாண்டு விடுமுறைக்கு பாட்டியின் வீட்டிற்கு  செல்ல ஆசைப்பட்டான்.விடுமுறையும் வந்தது.

தந்தையிடம் அகிலன் அனுமதி கேட்டு நின்றான்.அவரும் "யோசித்து சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு வயலுக்கு சென்றுவிட்டார்.அகிலனும் எப்போழுதும் போல் தன்னுடைய நண்பர்களுடன் விளையாட சென்றுவிட்டான்.

அகிலனின் தந்தை வயலில் யோசித்து கொண்டே வேலை செய்தார்.மாலை பொழுது வந்தது.வீட்டிற்கு வந்து தன்னுடைய மகனை  "அகிலா வா இங்கு " என்று அழைத்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் அருகில் வந்தான் அகிலன்.நீ பாட்டி வீட்டிற்கு செல்லலாம்,ஆனால் அவர்களை தொந்தரவு செய்ய கூடாது.அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்க வேண்டும் என்று சென்னார்.


சரிங்க அப்பா நான் மிகவும் உதவியாக இருப்பேன் பாட்டிக்கு என்று செல்லிவிட்டு தன்னுடைய பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்தான்.

காலை பொழுது விடிந்தது.அகிலனிடம் அப்பா நூறு ரூபாய் கொடுத்து,இது பேருந்து செலவுக்கு வைத்துக்கொள் மற்றும் தன்னுடைய வயலில் விளைந்த செவ்வாழை பழத்துடன் சில பொருட்களை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.பேருந்து புறப்பட்டது.சன்னல் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு இயற்கையை ரசித்துக்கொண்டு வந்தான்.இருபக்கங்களையும் மாறி மாறி பார்த்தான்.மரங்கள் செல்ல செல்ல ரசித்துக் கொண்டே வந்தான்.அவனுடைய பாட்டியின் ஊர் மல்லியூர்   வந்தது.பேருந்து நடத்துனர் 'மல்லியூர் மல்லியூர்' என்றார்,அகிலனும் இறங்க தயாரானான்.

பேருந்தை விட்டு இறங்கி தன்னுடைய பாட்டியின் வீட்டை நோக்கி புறப்பட்டான்.பாட்டி அப்போழுது தான் அரிசியை வாசலில் காய வைத்துக்கொண்டு  இருந்தார்.பாட்டி என்றான் அகிலன்.பாட்டி  அகிலனை பார்த்து "அகிலா" என்று சொல்லி கட்டி அணைத்துக்கொண்டார்.முத்தம் கொடுத்து"வாடா என் செல்லம்"என்றார்.சிறிதுநேரம் நலன் விசாரிப்பில் சென்றது.பின் பாட்டி அகிலனுக்கு பிடித்த உணவுகளை தயார் செய்து கொடுத்தார்..

சிலநாட்கள் சென்றது..

அகிலனுக்கு அடிக்அடி அப்பாவின் நினைவு வந்தது...ஆனாலும் பாட்டிக்கு உதவியாக இருந்தான் அவருடைய உணவு தயாரிக்கும் தொழிலில்.

ஒருமுறை பாட்டி அவனை வயலுக்கு அழைத்து சென்றார்.
அங்கும்  அவருக்கு உதவியாக இருந்தான்.அகிலா நீ வீட்டிற்கு சென்று,வீட்டின் தாழ்வாரத்தில் அரிவாள் உள்ளது அதை எடுத்து வா என்றார் பாட்டி.

சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வயலில் இருந்து பாட்டியின் வீட்டிற்கு செல்ல...அகிலனும் புறப்பட்டான். வீட்டிற்கு வெகுதூரம் சென்றன்.அவன் கண்கள் இருட்டியது,கைகள் வேர்த்தது.தூரத்தில் தண்ணீரில் ஏதோ மிதந்து வருவது போல் இருந்தது.மிகவும் பயம் வந்தது..

அருகில் செல்ல செல்ல பயத்தின் உச்சத்தில் இருந்தான் அகிலன்.ஒருநொடி அவன் கண்கள் அதை பார்க்க மிகவும் நடிங்கியது.அவனுக்கு தன்னுடைய அம்மாவின் நினைவு வந்தது.அவனுடைய அம்மா இறந்து தண்ணீரில் மிதந்தது ஞாபகம் வந்தது.தான் வளர்ந்த செல்ல பிராணியை காப்பற்ற தண்ணீரில் முழ்கி இறந்துவிட்டார் அவனுடைய அம்மா.

அப்போது மழைகாலம்,மழையில் வீட்டியில் உள்ள எல்லா பொருட்களும் மிதக்க ஆரம்பித்தது.அகிலன் வளர்த்த செல்ல பிராணி அடித்து செல்லப்பட்டது.

அதை காப்பாற்ற சென்ற அவனுடைய அம்மா இறந்தார்
அந்த ஞாபகம் அவனுக்கு வந்தது.வெடவெடத்து போன அகிலன் செல்லலாமா வேண்டாமா? என்று யோசித்தான்.
அவன் கும்பிடும் கடவுளை நினைத்துக்கொண்டு செல்லமுற்பட்டான்.தன்னுடைய பாட்டி தனக்காக காத்துக்கொண்டு இருப்பார் என்று நினைத்து செல்ல உறுதியாய் இருந்தான்.

     அருகில் செல்ல செல்ல தண்ணீர் காணாமல் போனது.
அது கானல்நீர்.அங்கு ஒரு மூட்டை கிடந்தது.அதை மெல்ல மெல்ல திறக்க முற்பட்டான்.அனைத்தும் தேவையில்லா பொருட்கள்,யாரோ தூக்கி எரிந்தவை.அதை எடுத்து போட்டு பெருமூச்சு விட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல
முற்பட்டான் அகிலன்.               
                                                                                                         -.ஷர்மிளா.

                                                                                                -  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக