வானவில்லே!
மழைதுளி வண்ணம்
தந்து நீ
நின்றாயா!...
வான் கொண்ட
மேகங்கள்
கொண்டாடுதே!
சிலநொடி நீ வந்து
நின்றவுடன்
மயில் கொண்ட
தோகைகள் விரிந்து ஆடுதே!
அந்த வானமும்
இந்த பூமியும்
நீலுதே நீலுதே!
சமத்துவம்
கொண்டாடுதே!
சமமாய்
நின்றாடுதே!...
வான் நிற்க
பூமி உருண்டோட
மேகம் சுழ
மாரியும் புயலும்
மாறி மாறி
நீலுதே நீலுதே!...
இங்கு மக்களின்
கண்ணீருக்கு
பஞ்சமில்லை
உறையிடம்
எஞ்சியில்லை
பசிக்கு சோறுமில்லை
சுவாசிக்க உயிரும்
இல்லை
கண்ணீரும்
கடல்நீரும்
ஒன்றாய் நின்று
சமத்துவம்
கொண்டாடுதே!.
சாதி சமயத்தை வென்று
ஆடுதே!...